முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் களமிறங்குகிறார்.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்க ஜனாதிபதி மறுத்திருந்தார்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலரான சுசில் பிரேமஜயந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியுள்ளார்.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறித் தனித்துப் போட்டியிடும் நிலையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.