முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமையன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெறவுள்ளார்.
இந்நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.