ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தேன்!- தயா மாஸ்டர்

thaya-masterஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் என்னிடம் கோரினார்.

எனினும், நான் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவாக தேர்தலில் போட்டியிடுவதே எனது நோக்கம்.இதன் மூலம் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.கடந்த காலங்களை நினைவு படுத்துவதில் பயனில்லை.மாகாணசபைத் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.நான் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடப் போவதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

இவை அனைத்தும் கட்டுக் கதைகள், எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிடவில்லை என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

Related Posts