ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை இலகுவாக வெற்றி கொண்டது இலங்கை

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.

malinga-

அது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில்.

இந்தப் போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 08 விக்கட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 50 ஓட்டங்களையும் தில்ஷான் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் எதிர்பார்த்தளவு ஓட்டங்கள் எதனையும் பெறவில்லை.

பந்து வீச்சில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சார்பாக ஜவாத் 25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 09 விக்கட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சார்பாக துடுப்பெடுத்தாடிய எஸ்.பி. படில் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க 4 விக்கடுக்களை கைப்பற்றினா்.

துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்பம் முதலே தடுமாறிய ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை இலங்கை அணி 14 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி கொண்டது.

Related Posts