Ad Widget

ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி

ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

isis

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்போதைய முக்கிய தலைவர்களில் ஒருவரும், ஈராக்கில் இயங்கி வந்த அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான அபு வஹீப், அன்பர் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக பென்டகன் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அன்பர் மாகாணத்தில் உள்ள ருத்பா நகரின் அருகே உள்நாட்டு படைகளின் உதவியுடன் கடந்த ஆறாம்தேதி அமெரிக்க போர்விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் சார்பில் அம்மாகணத்தின் தளபதியாக செயல்பட்டுவந்த அபு வாஹிப் மற்றும் அவனது கூட்டாளிகள் மூன்றுபேர் கொல்லப்பட்டதாக பென்டகான் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் இன்று தெரிவித்துள்ளார்.

Related Posts