ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்?

பிரபல இசைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இலங்கை இசை நிகழ்ச்சியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்கார் விருது நாயகன் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இம்மாதம் 23ம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருந்தது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தரப்பிடமிருந்து ஏற்பாடுகளை மற்றுமொரு தரப்பு பறித்துக்கொள்ள முயற்சித்துள்ளது.

இந்த இரண்டு தரப்புமே நல்லாட்சி அரசாங்கத்தை வெற்றியீட்டச் செய்த வர்த்தகத்தரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவிலும் பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts