ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய ஸ்ருதி ஹாசன்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘ராவணன்’ திரைப்படத்தில் வெளியான பாடல் ஒன்றை மறு உருவாக்கம் செய்து பாடியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

2010-ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ‘ராவணன்’ திரைப்படம் வெளியாகியது.இந்த படத்தில் இடம்பெற்ற ‘காட்டுச் சிறுக்கி’ என்ற பாடல்,ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ’எம்.டிவி அன்பிளக்டு’ என்ற நிகழ்ச்சிக்காக இந்த பாடலை மறு உருவாக்கம் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான்,அந்த பாடலில் ஸ்ருதி ஹாசனை பாட வைத்துள்ளார்.

தமிழில் காட்டுச் சிறுக்கி என துவங்கும் இந்த பாடல்,ஹிந்தியில் ‘ரான்ஜா..ரான்ஜா’ எனத் துவங்கும்.இந்த ஹிந்தி பாடலைத்தான் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.

சமீபத்தில் இதே நிகழ்ச்சியில்,காதலன் திரைப்படத்தில் வரும் ’ஊர்வசி.. ஊர்வசி..’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் மறு உருவாக்கம் செய்திருந்தார்.

அந்த பாடலில் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட பாடல் வரிகளை அவர் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts