ஏ.ஆர்.ரகுமானுக்கு மீண்டும் உலக அரங்கில் ஓர் கௌரவம்!

இந்திய சினிமாவின் உலக அடையாளம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஆஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார்.

ar-rahman

தற்போது மீண்டும் ஹாலிவுட்டில் மில்லியன் டாலர் ஆம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவரை மேலும் கௌரவம் சேர்க்கும் விதமாக இவரது சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிவுள்ளது.

இப்பட்டம் இவருக்கு அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts