இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் என்றால் ஏ.ஆர்.ரகுமான்.
இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார்.
ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தின் பாடல்கள் மிகவும் ரசிகர்களை சோதித்தது.
இந்நிலையில் இவரின் ஆஸ்தான இயக்குனர்கள் கூட மற்ற இசையமைப்பாளர்களை தேடி செல்வதாக கூறப்படுகிறது.
அந்த பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குனரும், தன் அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை புக் செய்ததாக கூறப்படுகிறது.