ஏ.ஆர்.ரகுமானின் அடுத்த இசை நிகழ்ச்சி!

சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள் வெளிநாடு, உள்நாடு என பல ஊர்களில் பிரமாண்ட இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், இளையராஜா தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் கடந்த ஜனவரி மாதம் சென்னை, கோவை நகரங்களில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரகுமான்.

அதையடுத்து வருகிற ஏப்ரல் 16-ந்தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்துகிறாராம் அவர்.

மேலும், தனது இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பாலிவுட் பின்னணி பாடகர்களை அதிகமாக பாட வைக்கும் ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் நடக்கும் நிகழ்ச்சியில் கேரளத்து பாடகர் பாடகிகளையே அதிகமாக பாட வைக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

Related Posts