ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார் எஸ்.ஜே.சூர்யா!

சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்து இயக்குனர் ஆனவர் பலர். அதேபோல் இயக்குனராக வேண்டும் என்று வந்த நடிகரானவர்களும் உண்டு. அந்த வகையில், டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா நடிகராக வேண்டும் என்று சினிமாவுக்குள் வந்தவர். ஆனால் டைரக்டராகி விட்டார். என்றபோதும் அவருக்குள் ஒரு நடிகன் இருந்ததினால்தான் வாலி, குஷி படங்களுக்குப் பிறகு தன்னைத்தானே இயக்கத் தொடங்கி விட்டார். அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்தார்.

sj-soorya-murugadas

இந்த நிலையில், தற்போது சில படங்களில் பரவலாக நடிக்கத் தொடங்கி விட்ட எஸ்.ஜே.சூர்யா, வை ராஜாவை, யட்சன், இறைவி படங்களைத் தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இதுபற்றி எஸ்.ஜே.சூர்யா கூறுகையில்,

சினிமாவிற்குள் வந்தபோது நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை. அதனால் கழுத்தை சுற்றி மூக்கைத் தொடுவது போன்று இயக்கம், தயாரிப்பு என சென்று பின்னர் இப்போது நடிப்புக்கு வந்திருக்கிறேன். ஆனால் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தபோதும், இப்போது நடித்து வரும் படங்களில்தான் நான் முழுமையான நடிகனாகியிருக்கிறேன். அந்த வகையில், இப்போதுதான் சினிமாவில் ஒரு நடிகனாக அறிமுகமானது போன்று உணர்கிறேன்.

அந்தவகையில், இறைவி படத்தைத் தொடர்ந்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் நல்ல வேடத்தில் நடிக்கிறேன். அதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் தமிழ், தெலுங்கில் நடிக்கிறேன். இதெல்லாம் எனது நடிப்பு திறமைக்கு கிடைத்த வரவேற்பாகவே கருதுகிறேன் என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

Related Posts