ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்படுத்திய பரபரப்பு!

அஜீத் நடித்த தீனா படத்தில்தான் இயக்குனராக அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராகி விட்டார் முருகதாஸ்.

ajith-murugadas

குறிப்பாக, ரமணா, கஜினி படங்களின் வெற்றி அவரை தெலுங்கு, இந்தி சினிமாக்களுக்கும் அழைத்து சென்றது. அந்த வகையில், சிரஞ்சீவி, அமீர்கான் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கி இந்திய அளவில் முன்னணி இயக்குனராகியிருக்கிறார் ஏ.ஆர். முருக தாஸ்.

மேலும், தமிழில் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி என்ற அதிரடி படங்களை கொடுத்தபோதும், அஜீத்தை வைத்து தீனாவுக்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை முருகதாஸ்.

ஆனால், முன்பு அஜீத்தை வைத்து மிரட்டல் என்றொரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் முருகதாஸ். அந்த படம் நடக்கவில்லை. இருப்பினும், அஜீத்துக்காக கதை ரெடி பண்ணிக் கொண்டு அவரது அழைப்புக்காக காத்திருக்கிறார்.

இந்தநிலையில், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், திடீரென்று தனது டுவிட்டரில் அஜீத்துக்காக முன்பு ரெடி பண்ணிய மிரட்டல் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்து, அஜீத்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக அஜீத் ரசிகர்கள் பரபரப்பாகி விட்டனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் தரப்பை விசாரித்தால், இப்போது அதற்கு சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள். அஜீத், சிவா இயக்கத்திலும், மகேஷ்பாபு முருகதாஸ் இயக்கத்திலும் தற்போது நடிக்க, இந்த படங்கள் முடிவடைந்த பிறகுதான் அஜீத்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைகிறார்களா? என்பது தெரியவரும் என்கிறார்கள்.

Related Posts