பார்ஸ்ட் ஃபுட் உலகில் இரண்டரை மணிநேரப் படம் என்றாலே ரசிகர்கள் நொருங்குகிறார்கள். ஆனால் இப்போதுதான் கோடம்பாக்கத்தில் மூன்று மணி நேர ஜவ்வு மிட்டாய்களை அதிகமாக தயாரிக்கின்றனர்.
சென்ற வாரம் வெளியான இசை படமும் 3 மணி நேரம் ஓடுகிறது. சென்டிமெண்ட் காட்சிகள் அதிகம். இந்த அதிகபடி நேரமே படத்தை ரசிக்க முடியாமல் தடுக்கிறது.
இதனை லேட்டாக புரிந்து கொண்டவர்கள் 7 நிமிடக் காட்சிகளை எடிட் செய்து ட்ரிம் செய்திருக்கிறார்கள். இனி படம் விறுவிறுப்பாக செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிகமாக எடுப்பானேன் பிறகு அவஸ்தைப் படுவானேன்.