Ad Widget

ஏப்ரல் 8ம் தேதி ஐபிஎல் 8 தொடங்குதாம்…

கிரிக்கெட் ரசிகர்களின் பிரியத்துக்குரிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதியை ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

IPL-8

ஏப்ரல் 8ம் தேதி 8வது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. மே 24ம் தேதியுடன் இந்தப் போட்டிகள் முடிவடையும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8வது ஐபிஎல் தொடர் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி முடிவடையும் என்று கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு சீசன்களுக்கான தேதிகளையும் கூட இப்போதே அறிவித்து விட்டது பிசிசிஐ. அதன்படி, 2016 தொடரானது ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறும். 2017 தொடரானது ஏப்ரல் 5ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை கிரிக்கெட் வாரியம் தடை செய்து வைத்துள்ளதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அகமதாபாத்திலிருந்தபடி இந்த வருடம் இயங்கும்.

அதன் ஹோம் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெறும். சில போட்டிகளை மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடத்தவுள்ளது பிசிசிஐ.

கடந்த ஆண்டும் அகமதாபாத்தில்தான் இயங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் என்பது நினைவிருக்கலாம். 2015, 2016 மற்றும் 2017 ஆகிய தொடர்களுக்கான டிவி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் நோவி டிஜிட்டல் நிறுவனம் ரூ. 302.2 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.

இந்த மூன்று ஆண்டுகளும் இந்த நிறுவனம்தான் போட்டிகளை ஒளிபரப்பும். மேலும் போட்டிகளின் போது அணிகளுக்கு தரப்படும் “Strategic Time Out” நேரத்திற்கும் இனிமேல் ஸ்பான்சர்களைப் பிடித்துள்ளனர். 3 சீசன்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 31.5 கோடியில் இந்த ஸ்பான்சரைப் பிடித்துள்ளனராம்.

Related Posts