ஏப்ரல் 20ஆம் திகதிவரை பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சர்

கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை நடாத்தப்படாமலேயே முதலாம் தவணை விடுமுறையைவிட்டு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அச்சநிலை காணப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நாளை தொடக்கம் வரும் மார்ச் 26ஆம் திகதிவரை பாடசாலைகள் மூடப்படுவதாக முன்னர் தீர்மானிக்கப்படிருந்த்து.

Related Posts