ராகவா லாரன்ஸ், தான் இயக்கியிருக்கும் கங்கா – முனி 3 படத்தின் பெயரை காஞ்சனா 2 என்று மாற்றினார். கடந்த டிசம்பர் மாதமே இந்தப் படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக லாரன்ஸ் விபத்தில் மாட்டிக் கொண்டதால் நான்கு மாதங்கள் கழித்து ஏப்ரல் 16 திரைக்கு வருகிறது.
தமிழிலும், தெலுங்கிலும் லாரன்சின் பெயரை அழுத்தமாக பதிய வைத்த படம், காஞ்சனா. இன்று தமிழ் சினிமாவை பிடித்தாட்டும் காமெடி பேய் கலாச்சாரத்துக்கு வித்திட்டது காஞ்சனா படம்தான். அதன் இரண்டாம் பாகம்தான் தற்போது தயாராகியிருக்கிறது.
தாப்ஸி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஏப்ரல் 16 படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.
நித்யா மேனன் இந்தப் படத்தில் சின்ன, ஆனால் திருப்புமுனை வேடம் ஒன்றை செய்திருக்கிறார். காஞ்சனாவை வெற்றிபெறச் செய்த கோவை சரளாவும் படத்தில் உண்டு.
தமிழில் தயாராகியிருக்கும் மற்ற படங்கள் இந்தப் பேயைப் பார்த்துதான் அதிகம் பயப்படுகின்றன.