ஏப்ரல் 15 பொது-வர்த்தக விடுமுறை தினம்

holiday-newyearதமிழ் – சிங்கள சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வருட சித்திரை புதுவருட பிறப்பானது எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளான விடுமுறை தினங்களில் வருவதினால் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டது.

இதற்கமைய 15ஆம் திகதியானது பொது மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

Related Posts