ஏன் வேதாளம் டிரைலர் வெளிவரவில்லை: சிறுத்தை சிவா விளக்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது வெளிவர உள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், தம்பி ராமையா, கபீர் சிங், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.

siva-siruththai

அதுபோல் இப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று யூடியூப்பிலும் சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் கடந்த ஒரு வாரமாக இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என்று செய்திகள் வந்தது. ஆனால், படம் வெளியாகும் நிலையில் இருக்க, இன்னும் டிரைலர் வெளிவரவில்லை.

இதுகுறித்து இயக்குனர் சிவாவிடம் கேட்டப்போது, ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கியது. தொடர்ந்து 107 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

மீதமுள்ள 40 நாட்களில் படத்தின் பின்னணி வேலைகளான டப்பிங், சீஜி, எடிட்டிங், பாடல் பதிவு உள்ளிட்ட பணிகளை தீவிரமாக செய்துள்ளோம்.

தீபாவளி படம் வெளியாக வேண்டும் என்று தீவிரமாக கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். இவ்வளவு பணிகள் இருந்ததால் படத்தின் டிரைலர் உருவாக்க நேரம் கிடைக்கவில்லை. இதை அஜித் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால், இப்படம் ரசிகர்களுக்கு சிறந்த தீபாவளியாக அமையும்’ என்றார்.

Related Posts