உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என வரம்புக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர்களின் விண்ணப்பம் தாமதமாகலாம் என்பதனால் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள நாளை வரை பரீட்சை திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.