ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயார்- சுமந்திரன்

புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாக மாறியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ஆட்சியமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் வெளியிலிருந்து ஆதரவளிக்க தயாரென ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் தனியார் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்ற அவர், அனைத்து கட்சிகளும் இவ்வாறு இணங்கி செயற்படுமாயின் மக்களுக்கு உரிய முறையில் சேவைகள் சென்றடையும் எனவும் தெரிவித்தார்.

Related Posts