ஏஏஏ இரண்டு பாகமாக மாறியது ஏன்?

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் – ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஏஏஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களுடன் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏஏஏ படம் பற்றி புதிய தகவல் வெளியானது. அதாவது, ‘பாகுபலி’ படத்தைப்போல் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர் என்பதே அந்த தகவல். முதல் பாகத்தை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் இரண்டு பாடல்களை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் தகவல். இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. ஏஏஏ படத்தை இரண்டு பாகமாக வெளியிட என்ன காரணம்?

ஏஏஏ படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாம். கூடவே கதையின் நீளமும் அதிகரித்துவிட்டதாம். இதனால் பட்ஜெட்டை ஈடுகட்டுவதற்காகவே ஏஏஏ படத்தை இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Posts