ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காவியத் தலைவன் பட டீஸர்!

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

ar-rahman

சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்பட பலரும் நடித்துள்ள படம் காவியத் தலைவன்.

வசந்த பாலனின் இயக்கியுள்ளார். வருண் மணியன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏராளமான பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் இதன் ஆடியோ சிடி வெளியானது. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

நாடகக் கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள காவியத் தலைவனின் முதல் டீசரில், ‘வாங்க மக்கா வாங்க.. எங்க நாடகம் பாக்க வாங்க..’ என்ற பாடலுடன் காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Related Posts