எஸ்-3 சூர்யாவின் கர்ஜனை!

சூர்யா நடித்த காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதேபோல் டைரக்டர் ஹரி இயக்கிய சாமி, கோயில், அருள் ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

soorya-s3-singam

இந்த படங்களில் அவரது இசையில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அந்த செண்டிமென்ட் காரணமாகவே தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தின் இசையமைப்பாளராகியிருக்கிறாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.

குறிப்பாக, மெலோடி கிங்கான ஹாரிஜ் ஜெயராஜ் என்னை அறிந்தால், அனேகன் உள்ளிட்ட படங்களில் அதிரடியான பாடல்களும் கொடுத்திருப்பதால், அதை முன்வைத்து இந்த எஸ்-3 படத்துக்கும் அவரிடம் அதிரடியான பாடல்களாக கேட்டுள்ளாராம் டைரக்டர் ஹரி.

அந்த வகையில், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரேயொரு பாடலை மட்டுமே பதிவு செய்து ஸ்பாட்டுக்கு அனுப்பியுள்ளாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.

மற்ற பாடல்களுக்கான டியூன்கள் அனைத்தும் ரெடியாகி விட்ட நிலையில், சமீபத்தில் படப்பிடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்த டைரக்டர் ஹரி, மற்ற டியூன்களையும் தனக்கு பிடித்தமானதை ஓகே செய்து கொடுத்திருக்கிறாராம்.

தற்போது வசன காட்சிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அதனால் அடுத்து பாடல் காட்சிகளை படமாக்கும் வேலைகள் தொடங்கி விடும் என்பதால், இப்போது இரவு பகலாக அமர்ந்து எஸ்-3 படத்துக்கான மற்ற பாடல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார் ஹாரிஸ்ஜெயராஜ்.

இதற்காக மும்பை மட்டுமின்றி, லண்டனைச்சேர்ந்த ஒரு பாடகரும் சமீபத்தில் வந்து பாடிவிட்டு சென்றிருக்கிறார். அந்த வகையில், முந்தைய சிங்கம் படங்களை விட இந்த படத்தில் சூர்யாவின் கர்ஜனை அதிகமாக இருப்பதால் பாடல்களுக்கும் அதிரடியான இசையை கொடுத்திருக்கிறாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.

Related Posts