எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அஜித்?

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படம் அஜித்தின் ஆக்சன் பட வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வேதாளம் படத்தில் நடித்து வந்தபோது காலில் அடி பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித், இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்கிறார்.

குறிப்பாக, ரிஸ்க்கான காட்சிகளில் டூப் நடிகரை பயன்படுத்திக்கொள்ளலாம் என் று அவரிடம் கூறியபோது, ரிஸ்க்கான காட்சிகளில் நான் நடித்து அதற்கு ரசிகர்கள் கைதட்ட வேண்டும். அதுதான் எனக்கு பெருமை. மாறாக, டூப் நடிகர் கஷ்டப்பட்டு நடித்து அந்த வெகுமதியை நான் பெறுவது முறையல்ல. அதில் எனக்கு உடல்பாடில்லை என்று சொல்லி எப்போதும்போலவே இந்த படத்திலும் தானே சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்கிறாராம் அஜித். அப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.

நமக்கு கிடைத்த செய்திப்படி, அஜித்தின் அடுத்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, பேராண்மை, இயற்கை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியுள்ள ஜனநாதன், அந்த படங்களை சமூக நோக்கமுள்ள கதைகளில் இயக்கியிருந்தார். அதைப்போலவே அஜித் நடிக்கும் இந்த புதிய படமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதையில் தயாராகிறதாம். இந்த படத்திற்கான கதை ஏற்கனவே அஜித்திடம் சொல்லி அவர் ஓகே பண்ணி விட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.

Related Posts