எழுவைதீவு இறங்குதுறைக்கான வீதி நவீன முறையில் புனர்நிர்மாணம்

எழுவைதீவு இறங்குதுறைக்கான சுமார் மூன்று கிலோ மீற்றர் வீதி நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

வடக்கிற்கான விசேட கருத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த வீதி நீண்ட காலமாக திருத்தப்படாது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலகம் எடுத்த முயற்சியின் பலனாக சுமார் 26 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Posts