எந்தவொரு சூழ்நிலையிலும் எழுத்து மூலமான உறுதிமொழியின்றி தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் நிர்மால் ராஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி அளிப்பதாக செய்யப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை.இரண்டு மாதங்களாக சம்பளம் பெற்றுக் கொள்ளாத காரணத்தினால் சில விரிவுரையாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காது இந்தப் பிரச்சினையை மேலும் நீட்டித்துச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கோருகின்றோம்.
உரிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் வரையில் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.