எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு  சனிக்கிழமை (06.07.2019) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியத் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு பொ.ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

சிறப்புப் பேச்சாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், மன்னார் மாவட்டத்தினுடைய பொதுஅமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஏராளமானோர் கலந்துகொண்ட இம் மாநாட்டில் மாநாட்டுத் தீர்மானங்ளாக ஒன்பது பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரகடனங்கள்

01. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள். பல ஒப்பந்தங்கள் செய்ப்பட்டு முறிக்கப்பட்டும் இருக்கின்றன. பிராந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் தமிழ் மக்கள் நம்பவைத்து ஏமாற்றப்;பட்டிருக்கிறார்கள், 2009 மே மாதத்தோடு ஆயுதப்போராட்டம் இல்லாமல் செய்யப்பட்ட பின்னணிக்குள் கடந்த 10ஆண்டுகளாக முன்னனெடுக்கப்பட்டுவந்த தீர்வு முயற்சிகள் எவையும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. இவ்வாறனதோர் பின்னணிக்குள் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய இணைந்த வடகிழக்கில் சமஸ்டிக் கட்டமைப்புடன் கூடிய மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வே தமிழ்மக்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

02. வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படல் வேண்டும். 13வது திருத்தத்தை ஆதரிக்கும் இந்தியா, வடகிழக்கு இணைப்பை நிரந்தரமாக்க இலங்கை அரசுடன் பேச வேண்டும். யுத்தம் முடிவுற்றுப் பத்து ஆண்டுகள் ஆகியும் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. ஆட்சியாளர்கள் மீது போர்க்குற்ற விசாரணை தொடுக்கப்படவில்லை. காலத்துக்கு காலம் பல ஆணைக்குழுக்களை நிறுவி, பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றும் வேலையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். உண்மையைக் கண்டறிய சர்வதேச சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

03. 2009ற்குப் பின் யுத்தத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திணைக்களங்கள் முன்னெடுத்துவருகின்றன. வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற திணைக்களங்களும் மகாவலி அபிவிருத்தி சபையும் புத்தசாசனத்தை பாதுகாக்கும் கட்டமைப்புகளும் உல்லாசப் பயணத்துறைக்குப் பொறுப்பான அமைப்புகள் போன்ற அரச உபகரங்களும் தமிழ் மக்களின் தாயகத்தை விழுங்கி வருகின்றன. மரபுரிமைச் சொத்துகளை ஆக்கிரமித்து வருகின்றன. காடுகளையும் கடல் படு திரவியங்களையும் கனிப் பொருட்களையும் சுரண்டி வருகின்றன. இவ்வாறு வேறு வழிகளில் யுத்தத்தைத் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

04. காணாமலாக்கப்பட்டவர்களுக்;காகப் பத்து ஆண்டுகளாகப் போராடி வருகின்ற, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீதியோரத்திலே அமர்ந்து போராடுகின்ற உறவுகளுக்கு இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அரசாங்கமும் சர்வதேச சமூகமும் குறிப்பாக ஐ.நாவும் இதில் விசுவாசமான அக்கறை செலுத்தவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் அக்கறை செலுத்தவில்லை. மறப்போம், மன்னிப்போம் என்று அரசு அசட்டடை செய்கிறது. காணாமல் போனோருக்கான அலுவலகமும் (ழுஆP) ஒரு ஏமாற்றுவித்தை. ஆறாயிரம் ரூபா பணம் கொடுக்க முனைவது போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும். 30ஃ1 தீர்மானம் நடைமுறைக்கு வரவேண்டும் அரசாங்கம் உண்மையைக் வெளிக்கொணர்ந்து பரிகாரம் தேட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

05. அரசியல் கைதிகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. பல தடவைகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் விட்டிருக்கிறார்கள். எனவே அரசியல் கைதிகள் சிறையில் மரணமடைந்து கொண்டிருக்கும் நிலையில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் யாவரும் விரைவாக விடுலை செய்யபடவேண்டும் என நாம் கோருகின்றோம்.

06. பயங்கரவாதத் தடைச்சட்டம். நீக்கப்படுதல் வேண்டும். அதன் உட்பிரிவுகள் மிக ஆபத்தானவை. அதனால்தான் இன்றும் பலர் சிறையில் வாடுகின்றனர்.அத்தோடு அச்சட்டத்தை கையில் வைத்துகொண்டு யாரையும் கைதுசெய்யலாம், யாரையும் விசாரிக்கலாம் என்ற அதிகாரங்களை அனுபவித்துவரும் படைத்தரப்பும் காவல்துறையும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பிராந்திக்;குள் வைத்திருக்கின்றன. எனவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்;.

07. தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டமுறையில் இயற்கை வளம் அபகரிப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன, கனியவளங்கள் சுரண்டப்படுகின்றன இது எமது வாழ்வையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குவதுடன். எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களை தமிழர் தாயகத்தில் ஏற்பட வாய்ப்பளித்துவிடும். இயற்கைக்கு மாறான சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுவதுடன் காடுவளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

08. கடந்த பத்தாண்டுகளாகத் தீர்வு முயற்சிகள் வெற்றி பெறாத பின்னணியில் இனப்பிரச்சினைக்காக ஒரு பொருத்தமான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காகவாவது சம்பந்தப்பட்ட அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் ஒரு குடையின் கீழ் இணையவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகின்றது.

09. ஒரு பசுமைக் கட்சி என்ற அடிப்படையில் எமது தாயகத்தின் பசுமை எதிர்காலத்தைப் பாதுகாப்போம் என்று இம் மாநாடு உறுதியளிக்கிறது. அப் பசுமை நிகழ்சி நிரலின்கீழ் எமது பசுமைத் தாயகத்தைப் பாதுகாப்பதற்கான தன்னாட்சி அதிகாரங்களை பெறுவதற்காகப் போராடும் அனைத்துத் தரப்புகளோடும் நாம் விசுவாசமாக இணைந்து செயற்படுவோம் என்று இம் மாநாடு உறுதிகூறுகிறது.

Related Posts