எழுக தமிழ்-2019 ஏற்பாடுகள் குறித்த ஊடக அறிக்கை

முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நீதியைப் பெற்றுத் தருவதில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது இருக்கின்றமையானது, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற கூற்றின் வழியே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான நீதியானது அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளாதார, இராஜதந்திர நலன்களை முன்னிறுத்தி தாமதிக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடேயாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திரமாக அமையப்பெற்ற புவிசார் முக்கியத்துவத்தினை தமக்கு சாதகமாக்கி அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுள்ளதோடு தமிழர்கள் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை முழுவீச்சில் முன்னெடுத்து வரும் சிறீலங்கா அரசிற்கு மேற்கூறப்பட்ட புறநிலையானது மென்மேலும் ஊக்கத்தையே கொடுத்து வருகின்றது.

இவ் நச்சு வட்டத்திலிருந்து எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழர்களாகிய நாம் தேசமாக அணிதிரண்டு ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்குணர்ந்தே தமிழ் மக்கள் பேரவை ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களை ஆரம்பித்திருந்த காலத்தைவிடவும், அதற்கான தேவையும், பரப்பும், நியாயமும் இன்று மிகப் பெரியதாகியுள்ளமையே இவ் எழுக தமிழுக்கான கதவினைத் திறந்துள்ளது.

சரியான நேரத்தில் மிகச்சரியான முனைப்பாக தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணி அமைந்துள்ளதென்பதை, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் தமிழ்நாடு என தமிழர் பெரும்பரப்பில், யாழ் மண்ணில் நடைபெறும் சமகாலத்திலேயே ‘எழுக தமிழ்’ எனும் பெயரிலேயே ஆதரவுப் பேரணிகள் நடாத்தப்படவிருக்கின்றமை மீள் உறுதிசெய்து நிற்கின்றது. அத்துடன் ஜெனீவாவிலும் இனப்படுகொலைக்கான நீதி கோரி மாபெரும் எழுச்சிப் பேரணி செப்ரெம்பர் 16 இன்று நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் வெளிப்படும் எழுகையானது தமிழர் பெரும்பரப்பில் மேற்கொள்ளப்படும் நீதிக்கான முன்னெடுப்புகளுக்கு பலம்சேர்ப்பதாக அமையும் என்பதனை இவ் எழுக தமிழ் மீண்டும் எடுத்தியம்பியுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கு தழுவி தேசமாக தமிழர்கள் அணிதிரளும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியானது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திர்த்திச் செல்லும் என்ற அடிப்படையில் மாபெரும் எழுச்சி பிரவாகமாக இவ் எழுகதமிழை மேற்கொள்வதற்கான பூரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ் ஆதரவுத்தளத்தினை ஒருங்கிணைத்து எழுக தமிழை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏதுவாக வடக்கு கிழக்கு தழுவியதான பூரண கதவடைப்பிற்கு எம்மால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடற்றொழிலாளர்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினத்தில் தொழில் நிறுத்தம் செய்யுமாறு சம்மேளனத்தின் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளன.

தாயகம் தழுவியதாக வருகையினை உறுதிசெய்திருக்கும் அமைப்புகளிற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. தன்னெழுச்சியாக வருபவர்களையும் எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் பொதுவான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இனமான உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் எழுக தமிழ் நிகழ்விற்கு அலைகடலென திரண்டு வருமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.
கிழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழ்கியுள்ளார்கள்.

 யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
 யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்
 யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கம்
 கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
 மன்னார் பிரஜைகள் குழு
 தமிழர் மரபுரிமைப் பேரவை
 தென் கயிலை ஆதீனம் – குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார்
 யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம்
 நல்லை ஆதீனம் – குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
 யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிதாகாசானந்தா
 சர்வதேச இந்து குருமார்கள் ஒன்றியம் – வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள்
 செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் – ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
 மட்டக்களப்பு மாவட்ட இந்து மத குருமார்கள் ஒன்றியம்
 மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம்
 ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம்
 வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
 வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்
 யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்
 கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்
 மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 பளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 கண்டாவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 யாழ்ப்பாண பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 காரைநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 வேலனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 வலிகாமம் தென் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
 இச்சமாசங்களுக்குட்பட்ட 150 இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்
 யாழ் பிராந்திய கூட்டிணைக்ப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையம்
 அச்சுவேலி சிற்றூர்திகள் சேவை சங்கம்
 வடமராட்சி சிற்றூர்திகள் சேவை சங்கம்
 வவுனியா மாவட்ட பொது அமைப்புகள்
 மன்னார் மாவட்ட பொது அமைப்புகள்
 சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யம்
 வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு
 யாழ்-மாதகல்(787) சிற்றூர்திகள் சேவை சங்கம்
 மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம்
 மன்னார் சமூக வளர்ச்சியின் மாற்றம் அமைப்பு
 வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுனுளு மற்றும் றுசுனுளு சமாசம்
 யாழ் சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
 வடமராட்சி சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
 தென்மராட்சி சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
 மன்னார் நகர வர்த்தக சங்கம்
 கிளிநொச்சி வர்த்தக சங்கம்
 வவுனியா வர்த்தக சங்கம்
 யாழ் வணிகர் கழகம்
 நெல்லியடி வர்த்தக சங்கம்
 பருத்தித்துறை வர்த்தக சங்கம்
 கொடிகாமம் வர்த்தக சங்கம்
 சாவகச்சேரி வர்த்தக சங்கம்
 சுன்னாகம் வர்த்தக சங்கம்
 சங்கானை வர்த்தக சங்கம்
 மானிப்பாய் வர்த்தக சங்கம்
 யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்
 நெல்லியடி சந்தை வியாபாரிகள்
 திருநெல்வேலி சந்தை வியாபாரிகள்
 தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம்

இவற்றுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கங்கங்கள், மாதர் சங்கங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், சமூகமட்ட அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகிய தரப்பினர் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள். அத்துடன் தாய்த்தமிழ் நாட்டில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தமிழர் தாயகத்தில் இருந்து செயற்படுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தையும், எழுக தமிழ் கோசங்களையும் ஏற்றுகொண்ட பெரும்பாலான கட்சிகளும் தமது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளன.

வாகன ஒழுங்குகள் தொடர்பான விபரங்கள்.

மன்னார் – ராஜா 0767089338
வவுனியா – சிறிதரன் 0777908617
வடமராட்சி – சிவகுமார் 0774521392
வடமராட்சி கிழக்கு – காண்டீபன் 0761660414
வலிகாமம் – சரவணன் 0777243129
வலிகாமம் கிழக்கு – உதயகுமார் 0773024487
ஏனைய இடங்களுக்கு மேலதிக விபரங்களுக்கும் – 0760025080

போக்குவரத்து சேவையின் நேரங்களும் வழித்தடங்களும்

பருத்தித்துறை பேருந்து நிலையத்தரில் இருந்து (750 வழித்தடத்தில்)
காலை 7.30 மணி
காலை 8.00 மணி
தொடர்பிற்கு – சிவகுமார் 0774521392
கொடிகாமம்-சாவகச்சேரி-கைதடி ஊடாக யாழ்ப்பாணம்
காலை 7.30 மணி
காலை 8.00 மணி
தொடர்பிற்கு – 0776186554
மாவிட்டபுரம்-சுன்னாகம்-மருதனார்மடம்-கொக்குவில் ஊடாக யாழ்ப்பாணம்
காலை 7.30 மணி
காலை 8.00 மணி
தொடர்பிற்கு – சரவணன் 0777243129
மூளாய்-சுழிபுரம்-சித்தன்கேணி-சங்கானை-மானிப்பாய்-யாழ்ப்பாணம்
காலை 7.30 மணி
தொடர்பிற்கு – சரவணன் 0777243129
கேவில்-ஆழியவளை-உடுத்துறை-வத்திராயன்-மருதங்கேணி குடியிருப்பு வீதிகள் ஊடாக புதுக்காடு-யாழ்ப்பாணம்
காலை 6.00 மணி
தொடர்பிற்கு – காண்டீபன் 0761660414
மருதங்கேணி சந்தி-செம்பியன்பற்று தெற்கு-செம்பியன்பற்று வடக்கு-மாமுனை வடக்கு-மாமுனை சந்தி-நாகர்கோவில் வடக்கு ஊடாக யாழ்ப்பாணம்
காலை 6.30 மணி
தொடர்பிற்கு – காண்டீபன் 0761660414
அம்பன் மருத்துவமனை-பொற்பதி-குடத்தனை வடக்கு-மணற்காடு-வல்லிபுரம்-யாழ்ப்பாணம்
காலை 7.00 மணி
தொடர்பிற்கு காண்டீபன் – 0761660414

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
14.09.2019

Related Posts