எழுக தமிழ் பேரணி முற்றவெளியை வந்தடைந்தது!!

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலை வந்தடைந்தது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இன்று முற்பகல் ஆரம்பமானது.

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற சர்வதேச விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது.

தற்போது யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலை பேரணி வந்தடைந்தது.

அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.

Related Posts