எழுக தமிழ் பேரணிக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு!

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு ஆசிரியர் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அதில் நாங்கள் பௌத்தர்களையும் சிங்களச் சகோதரர்களையும் வெறுக்கும் இனவாதிகளல்ல. மாறாக எமது இனத்துக்கான அடையாளத்தை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தை வழங்காது, அடக்குமுறையின் அடையாளமாக, சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தைத் திணிக்கும் ஒரு செயற்பாடாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எழுக தமிழ்” தொடர்பான மேலும் செய்திகளுக்கு..

Related Posts