எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது!! கூட்டமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! சுமந்திரன்

சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது எனவும், அதற்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், அதில் தாம் கலந்துகொள்ளவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சுமத்தினார்.

நாட்டில் தற்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணியானது தெற்கு மக்களுக்கு தவறானதொரு கருத்தையே தோற்றுவிக்கும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts