எழுக தமிழ் : அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும்

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ரத்டெம்பேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டதன் பிரகாரம், இராணு முகாம்களை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. அந்தக் கோரிக்கைக்கும் அரசாங்கம் ஒருபோது இணங்காது.

ஹர்த்தால், போராட்டம் மற்றும் பேரணிகளை நடத்தி முன்வைக்கப்படும் அசாதாரணமாக கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஒருபோது எடுக்காது என்றும், இந்த பேரணியானது இனம் மற்றும் மதங்களுக்கு கிடையில் கட்டியெழுப்பப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவிப்பவனவாய் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts