எழுக தமிழுக்கு சுமந்திரன் ஆதரவு ? மக்களின் எழுச்சியை வரவேற்பதாக அறிவிப்பு

பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற செயற்பாடுகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தருமான எம்.ஏ.சுமந்திரன் முக்கியமாக காணி விடுவிப்பு அரசியல் கைதிகள் விடுவிப்பு போன்றவிடையங்களில்அரசு தாமதமாக செயற்படுவது தொடர்பில் அரசின் மீது மக்களிற்கு அதிருப்தி இருப்பதாகவும் தங்களிடமும் அந்த அதிருப்திநிலை காணப்படுவதாகவும் அதனை பாராளுமன்றின் ஊடாக தாம் வெளிப்படுத்தியிரப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த மக்களுடைய எழுச்சியை வேறுவிதமாக சித்தரிப்பதற்கு ஆட்கள் இருப்பதாகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அறிகுறிகள் தென்படுகிறது என அவர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்கக்கூடும் என்றும் அதற்காக மக்கள் எழுச்சிப்பேரணியை செய்யவேண்டாம் என தான் கூறவில்லை என்றும் மக்களுடைய உணர்வுகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts