எழுக தமிழிற்கு ரெலோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது!

எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ இயக்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா, கென்றி மகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

தமிழினத்தின் இன்றைய நிலையைக் கருத்திற்கொண்டும், குறுகிய அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பொன்மொழிக்கமைய எமது உரிமைக் குரல் ஓங்கி ஒலித்திட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லையென எனவும், இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நீதிகோரி நிற்கும் எமது மக்களின் எழுக தமிழ் பேரணிக்கு எமது பூரணமான ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு..

Related Posts