எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலை மாணவர் பீடங்கள் கூட்டறிக்கை

எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலை மாணவர் பீடங்கள்  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2015-16 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய 2016-17 ஆண்டுக்கான ஒன்றியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கலைப்பீடம் விஞ்ஞான பீடம் மருத்துவபீடம் ஆகியவற்றின் மாணவர் ஒன்றியங்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வௌியிட்டுள்ளன.

அதில் பேதங்களை மறந்து  எழுகதமிழ் நிகழ்வில் சனிக்கிழமை (24) காலை  அனைவரையும் முற்றவெளியில் கூடுமாறு அறைகூவல் விடப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றியம்சார்பாக அறிக்கை எதுவும் எழுகதமிழ் நிகழ்வுக்கு ஆதரவாக வெளியிடுவதை தடுக்கும் நடவடிக்கையில் சில பீடங்களின் விரிவுரையாளர்கள் செயற்பட்டதாகவும் அதனையும் மீறி கூட்டறிக்கையாக இவ்வறிக்கை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

14457524_301385796903130_5091627607005277115_n

 

Related Posts