எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் அறுவர் இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அறுவர், இந்தியாவின் மத்திய கல்கத்தா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (14) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அறுவரும் இலங்கைத் தமிழர்கள் எனவும் இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னரே சென்னையிலிருந்து கல்கத்தா நகருக்கு வந்துள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தின நிகழ்வில் அசம்பாவிதங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts