எல்லை மீறிய விளையாட்டால் காயம்: தனுஷ் பற்றி மீண்டும் சுசித்ரா

தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும், விளையாட்டு எல்லை தாண்டி போனதில் காயம் ஏற்பட்டதாகவும் பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் பாடகி சுசித்ரா, தனுஷ், சிம்பு கலந்து கொண்டனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதில் தனது கையில் காயம் ஏற்பட்டதாக பாடகி சுசித்ரா ட்வீட்டியிருந்தார்.

சுசித்ராவின் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

சுசித்ராவின் ட்வீட்டுகளில் ஆதாரம் இல்லை. இது தனிப்பட்ட பிரச்சனை என அவரின் கணவர் கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் சுசியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனுஷ் என்னை தாக்கவில்லை. அது விளையாட்டு எல்லை மீறிபோய்விட்டது. என் கையில் ஒரு டீம் காயம் ஏற்படுத்தியது. ஷப்பா என ட்வீட்டியுள்ளார் சுசித்ரா.

அப்போ முன்னாடி ட்வீட் போட்டப்போ போதையா… இல்ல இப்போ போதையா… ஏன் இந்த உளறல்?? என ஒருவர் ட்விட்டரில் கேட்டுள்ளார்.

ஏன் மேடம் கலர் கலரா ரீல் உடுறீங்க. ஹேக்ட்னு சொன்னீங்க இப்போ கேம்னு சொல்றீங்க அப்போது அது நீங்க தானே போஸ்ட் பன்னது ஷப்பா என்று ட்வீட்டியுள்ளார் மற்றொரு ரசிகர்.

Related Posts