எலி, பூனை, கரப்பத்தான் மட்டுமே மஹிந்தவுடன் இறுதியாக இருக்கும்!- மைத்திரி சவால்

எதிர்வரும் 5ம் திகதி எலி – பூனை – கரப்பத்தான் மட்டுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இறுதியாக இருக்கும் என எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கட்சித்தாவலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் வருகின்ற 5 ம் திகதி தேர்தல் பிரசார இறுதி நாளில் அரசாங்கத்துக்கு எலி பூனை கரப்பதான் மட்டுமே அரசுடன் இருக்கும்.

நான் வெளியேறும் மூன் அனைத்துக்கும் வேலை பார்த்து விட்டுத்தான் வெளியே வந்தேன் . என்பதை சொல்ல விரும்புகின்றேன்

இன்றைய நாளில் இருந்து உங்களது புத்தகத்தில் எழுதி வையுங்கள் நான் சொன்னது நடக்குதா இல்லையா என்பதை என சவால் விடுத்துள்ளார்.

Related Posts