எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரியது லிட்ரோ நிறுவனம்!

எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தற்போது அதிகாரம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே விலை அதிகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவையே வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts