எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – லாஃப்ஸ் நிறுவனம்

நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts