ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த மே மாதத்திற்கான மின்சார கட்டண பட்டியலினை சமர்ப்பிக்குமாறும் லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
இருப்பினும், எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பும் நிலையில், மின்சார கட்டண பட்டியலினை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என லிட்ரோ நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.