எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!!

எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன்படி புதிய விலை 3,186 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இது தவிர 05 கிலோ எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு 1281 ரூபாயாகவும் 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு 598 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, அடுத்த மாதம் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டால், பொருளாதார நெருக்கடியின் பின்னர் தொடர்ந்து நான்காவது முறையாக எரிவாயு விலை குறைக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts