எரியூட்டப்பட்ட வாகனத்தில் இருந்த சடலம் இனம் காணப்பட்டது!

நீர்கொழும்பு, தங்கொட்டுவ பகுதியில் எரியூட்டப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து சடலங்களில் நேவி கபில என்ற நபரின் சடலமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

van_colombo-

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் வாகனங்களின் குத்தகை அறவிடல், வட்டிக்கு பணம் வழங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், செனரத் கபில என்றழைக்கப்படும் நேவி கபிலவினால் பாதிக்கப்பட்ட குழுவினர் குறித்த ஐவரையும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இதனை ஒப்புகொண்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி 119 என்ற அவசர பிரிவிற்கு கிடைத்த அழைப்பினை அடுத்து குறித்த ஐந்து சடலங்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts