எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 155 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாகும். இதற்கமைய, 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலையும் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, ஓட்டோ டீசல் விலையை அதிகரிக்காது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Posts