எந்தவகையான எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபன தலைவர் ஜி.வீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பலவற்றினதும் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.