எரிபொருள் விலையை உயர்த்துதவற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம் இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

டீசல் உற்பத்திக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு, விலை அதிகரிப்பிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

டீசல் உற்பத்தி வரி 3 ரூபாவிலிருந்து 13 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பானது பெற்றோல் உற்பத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய வள அமைச்சருடன் சந்திப்பு நடாத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts