எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லை


எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக் கூறிய அவர்,

மக்கள் இனிமேல் 10ம் திகதி வரும் போது அச்சமடைய தேவையில்லை. 10ம் திகதி பேய் தினம். இனிமேல் அந்த பேய் தினத்திற்கு பயப்பட தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்காக கடந்த மே மாதம் 10ம் திகதி முதல் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் புதிய விலைச் சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts