எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, அவ்வாறான போலியான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts