எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமரின் அறிவிப்பு!

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டுவரப்படும் எரிபொருளை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts