எரிபொருள் விநியோகத்தை இடை நிறுத்தியது லங்கா ஐ.ஓ.சி!!

நாட்டிலுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவிக்கையில்,

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதனை இன்றும் ( 8 ) மற்றும் நாளையும் ( 9 ) பாதுகாப்புக் காரணங்களுக்காக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

இருப்பினும், திங்கட்கிழமை முதல் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts